ஜப்பான் மொழியில் வெளியானது ‘கபாலி’

செவ்வாய், 2 மே 2017 (17:53 IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினி, ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த வருடம் வெளியானது ‘கபாலி’. தமிழில் உருவான இந்தப்  படம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மலாய், சைனீஸ், தாய் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

 
 
கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘முத்து’ படம் ஜப்பானில் திரையிடப்பட்டு, மிகப்பெரிய வசூலைக் குவித்தது. அதனால், பெரும்பாலான ரஜினி படங்கள், ஜப்பானிலும் வெளியிடப்பட்டு வந்தன. அந்த வகையில், ‘கபாலி’ படத்தையும்  பார்க்க ஆசைப்பட்டனர் ஜப்பான் ரசிகர்கள். அதன்படி, இன்று ஜப்பான் மொழியில் ரிலீஸ் ஆகியிருக்கிறது ‘கபாலி’.

வெப்துனியாவைப் படிக்கவும்