இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோல யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டகாசமான ஸ்டில் ஒன்றை வெளியிட்டு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் வெளியாகி சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆகியுள்ளது.