ஜெய் என்ன அஜித்தா...? - விட்டு விளாசிய தயாரிப்பாளர்

வியாழன், 15 செப்டம்பர் 2016 (15:18 IST)
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் நவம்பர் 10 வெளியாகிறது. அதனை அறிவிக்கும்விதமாக பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தது. படத்தின் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் ஜெய் வரவில்லை.

 
அதனை குறிப்பிட்டு பேசிய தயாரிப்பாளர் சிவா, அஜித் சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றால் அது நியாயமிருக்கிறது. அவர் எந்த விழாக்களுக்குமே வருவதில்லை. அதனால் ரசிகர்கள் அவரை திரையரங்கில் பார்க்க ஆசைப்படுகிறார்கள். வளர்ந்த பிறகுதான் அவர் இப்படியொரு முடிவை எடுத்தார். ஆனால், சிலர் வளர்கிற போதே நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஜெய்க்கு அஜித் என்று நினைப்பா என்றார் காட்டமாக.
 
அடுத்து பேசிய வெங்கட்பிரபு விஷயத்தை பெரிதாக்க விரும்பாமல், ஜெய்யை நான் கூப்பிடலை, கூப்பிட்டிருந்தால் வந்திருப்பார் என்று சமாளித்தார். 
 
அஜித்தை போலவே, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறாராம் ஜெய். 

அதுதான் ரசிகர்களும் இவர் படத்தை தியேட்டர்ல பார்க்கிறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்காங்களோ.

வெப்துனியாவைப் படிக்கவும்