“ஜெய்க்கும், எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை” - சுந்தர்.சி

வெள்ளி, 12 ஜனவரி 2018 (10:09 IST)
‘ஜெய்க்கும், எனக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘பலூன்’ படத்தின் இயக்குநர் சினிஷ், ஜெய் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார். ‘பலூன்’  படப்பிடிப்புக்கு ஜெய் சரியாக வரவில்லை என்றும், அதனால் தயாரிப்பாளரின் பட்ஜெட்டை ஏற்றிவிட்டார் என்றும் சினிஷ்  கூறியிருந்தார்.
 
இந்நிலையில், நேற்று ‘கலகலப்பு 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஜெய் இந்தப் படத்தில் நடித்திருப்பதால், இதில் ஜெய்யுடன் ஏதாவது பிரச்னை ஏற்பட்டதா? என இயக்குநர் சுந்தர்.சி.யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 
“எனக்கும், ஜெய்க்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. 7 மணிக்கு ஷூட்டிங் என்றால், 6.45 மணிக்கே மேக்கப்புடன்  ரெடியாக இருப்பார் ஜெய். இத்தனைக்கும் ஜெய்க்கும், ஜீவாவுக்கும் இடையில் ஏகப்பட்ட காம்பினேஷன் ஸீன்கள் இருந்தன. அதில் கூட எந்தப் பிரச்னையும் இல்லை” என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்