அதற்குக் காரணம் படத்தை எப்படியாவது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டுமென படக்குழு நினைத்ததே என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படக்குழுவினர் படத்தை நெட்பிளிக்ஸில் டிஜிட்டர் ரைட்ஸ் மொத்தத்தையும் 45 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு தனுஷுக்கு விருப்பமில்லை என்றும் அதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இது போன்ற கருத்து மோதல்களை தவிர்க்க தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஒரே நாளில் திரையரங்குகளிலும், OTT-யிலும் வெளியாகும் என தெரிகிறது.