அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி சமந்தாவின் நடிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் "பிராணம் " என்ற முதல் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பாடலுக்காக சமந்தாவின் தெலுங்கு , தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.