இன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்: கமல்ஹாசன் வாழ்த்து..!

வெள்ளி, 2 ஜூன் 2023 (08:58 IST)
இன்றைய இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி இசைஞானி இளையராஜா பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படும் என்பதும் இசை ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெரிந்ததை. 
 
அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள இளையராஜாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
 
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய  உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்