தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே ரிலீஸ் செய்யலாம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் அதை ரத்து செய்த தமிழக அரசு,சிறப்புக் காட்சிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கவில்லை. இதனால் பண்டிகை நாட்களான ஜனவரி 13 முதல் 17 வரை தினசரி 7 காட்சிகள் வரை திரையிட முடிவு செய்துள்ளனர். சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவும் தற்போது ஜரூராக நடந்து வருகிறது. ஆனால் என்னதான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்தாலும் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இதனால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் தனது சம்பளத்தில் பெரும் பகுதியை விட்டுக் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் விஜய் சம்பளம் எதையும் விட்டுக்கொடுக்கவில்லையாம். தயாரிப்பாளர் என்னை நம்பி துணிந்து ரிலீஸ் செய்யுங்கள். பார்த்துக்கொள்ளலாம் என்றும் மட்டும் நம்பிக்கை அளித்துள்ளாராம். அந்த நம்பிக்கையில்தான் தயாரிப்பாளர் லலித் துணிந்து ரிலிஸ் செய்வதாக சொல்லப்படுகிறது.