மீண்டும் ஜில்லா இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா விஜய்?

வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (11:54 IST)
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

லியோ படத்தின் ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் அடுத்த படமான தளபதி 68 படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த இரு படங்களுக்கு அடுத்து விஜய் நடிக்கப் போகும் படம் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான ஜில்லா படத்தை இயக்கியவர் நேசன். அந்த படத்துக்குப் பிறகு அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் இப்போது விஜய் 68 படத்துக்குப் பிறகு விஜய் அவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்