ஹாலிவுட் படத்தின் காப்பியா ஸ்பைடர்?? இதோ ஆதாரம்!!

புதன், 9 ஆகஸ்ட் 2017 (16:36 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ஸ்பைடர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.


 
 
இன்று இப்படத்தின் டீசர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த படம் ஒரு சைக்கோ விஞ்ஞானிக்கும் மகேஷ் பாபுவிற்கு மத்தியில் நடக்கும் யுத்தம்தான் கதை என தெரிகிறது.
 
எஸ்.ஜே.சூர்யா சைக்கோ விஞ்ஞானியாக வில்லன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். டீசரில் எஸ்.ஜே.சூர்யாவின் கெட்டப் ஹாலிவுட்டில் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ் படத்தில் வரும் வில்லனின் தோற்றத்தை நினைவூட்டுகிறது. 


 

 
அந்த ஹாலிவுட் படத்திலும் கிட்டத்தட்ட இதே கதைக்களம் தான். ஒருவேளை கஜினி படத்தை ஹாலிவுட்டில் இருந்து கடத்தியது போல, ஸ்பைடர் படத்தையும் கடத்தி இருப்பாரோ? பொருத்திருந்து பார்ப்போம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்