கஞ்சா குடிக்கு அடிமையாகிவிட்டாரா ஸ்ருதிஹாசன்? சர்ச்சை கிளப்பிய பதில்!

செவ்வாய், 20 ஜூன் 2023 (20:00 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
 
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். 
 
இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். பின்னர் மீண்டும் சாந்தனு ஹசாரிக்கா என்ற புது காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன், கஞ்சா குடிக்கும் பழக்கம் இருக்கா என நெட்டிசன் ஒருவர் கேட்டதற்கு, எனக்கு அந்த பழக்கம் இல்லை. நான் குடிக்கவும் மாட்டேன். குடி இல்லாத ஒரு வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகிறேன்" என தெரிவித்து இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்