இதற்காக இயக்குனர் பேரரசு மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோரின் பெயர்கள் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தன. ஆனால் இப்போது விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு வெளியான தடம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மகிழ் திருமேனி. இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்ததால் அவருக்கே அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அளிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.