ஆண்ட்டி இந்தியனும் காப்பியடிக்கப்பட்ட கதையா…. கிளம்பிய புது சர்ச்சை?

திங்கள், 13 டிசம்பர் 2021 (15:03 IST)
ஆண்ட்டி இந்தியன் ஒரு இந்திப்படம் மற்றும் குறும்படம் ஒன்று ஆகியவற்றின் காப்பி என சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து வருபவர் ப்ளூசட்டை மாறன். இவர் தற்போது ஆண்டி இந்தியன் என்ற படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது சில காட்சிகளை வெட்ட சொல்லி வலியுறுத்தியும், அவற்றை வெட்டாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் சிங்கப்பூரிலும் வெளியாக இருந்த நிலையில் படத்தில் மத அமைப்புகளை விமர்சிக்கும் காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் இடம் பெறுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மறுதணிக்கைக்காக படக்குழுவினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆண்ட்டி இந்தியன் திரைப்படம் டேக் தமாஷா டேக் என்ற 2014 ஆம் ஆண்டு வெளியான படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது. அதே போல மறைந்த பத்திரிக்கையாளர் ஞாநி இயக்கிய யார் என்ற குறும்படத்தின் கதையும் இந்த படத்தின் கதையைப் போன்றதுதான் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சையில் ஆண்டி இந்தியனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்