டெல்லி மது விடுதிக்கு வெளியே சண்டையிட்டாது நானா? அஜய் தேவ்கன் விளக்கம்!

செவ்வாய், 30 மார்ச் 2021 (13:05 IST)
டெல்லி மது விடுதிக்கு வெளியே இரு நபர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்து சண்டை போடுவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில் வெள்ளை நிற உடையில் இருப்பது நடிகர் அஜய் தேவ்கன் என பலரும் சொன்னதால்தான் அப்படி அந்த வீடியோ வைரலாகப் பகிரப்பட்டது. இந்நிலையில் இப்போது அதற்கு அஜய் தேவ்கன் தரப்பு பதிலளித்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பது அவர் இல்லை என்றும் அவர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக டெல்லிக்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்காக மும்பையில்தான் இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்