இருமுகன் - சென்சாருக்குப் பிறகுதான் ரிலீஸ் தேதி

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (14:53 IST)
விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள இருமுகன் படத்தை செப்டம்பர் 8 -ஆம் தேதி வெளியிடுவதாக திட்டம். ஆனால், படம் சென்சாராகி வந்த பிறகே ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என்று இருக்கிறார்கள்.


 
 
விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோரும் இருமுகனில் நடித்துள்ளனர். ஆனந்த் ஷங்கர் இயக்கம், ஹாரிஸ் இசை. இந்த வாரம் படத்தை சென்சாருக்கு திரையிட்டு காட்ட உள்ளனர். அதற்காக முதல்பிரதி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
 
சென்சார் முடிந்த பிறகே படத்தின் ரிலீஸ் தேதியை முறையாக அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்