முதல் பாட்டே ஷ்ரேயா கோஷல் குரலில்..! இரவின் நிழல் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

செவ்வாய், 3 மே 2022 (14:58 IST)
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் வரிசையில் உள்ளவர் பார்த்திபன். படங்கள் இயக்கி வரும் இவர் வேறு சில படங்களில் நடித்தும் வருகிறார். முன்னதாக இவர் இயக்கி வெளியான ஒத்த செருப்பு நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்தும் உள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்த படம் 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

இதன் டீசர் சில நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ”மாயவா தூயவா” என்ற இந்த பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்