''தி கிரே மேன்'' திரைப்படத்தில் தனுஷ பெயர் பற்றிய தகவல் !

புதன், 15 ஜூன் 2022 (17:19 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளளது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார். அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  ஜூன் 22 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது,. இப்படத்தில் தனுஷ் அவிக் சென் என்ற கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்