தைவான் ஷூட்டிங்கை முடித்து தென் ஆப்பிரிக்கா கிளம்பிய இந்தியன் 2 படக்குழு!

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:10 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தைவானில் நடந்த ஷூட்டிங்கை முடித்து விட்டு அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்