இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (11:07 IST)
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் இன்னும் கலந்துகொள்ளவில்லை.

அவர் இல்லாத காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்று முதல் படமாக்கப்பட்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்