இலங்கையுடன் இன்று இரண்டாவது டி 20 போட்டி… தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

சனி, 26 பிப்ரவரி 2022 (09:48 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது போட்டி தர்மசாலாவில் நடக்க உள்ளது. இந்த போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்தியாவும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் தொடரை தக்க வைக்க முடியும் எனும் நிலையில் இலங்கையும் உள்ளதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணியில் இந்த தொடரில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. எதிர்வரும் டி 20 தொடரைக் கணக்கில் கொண்டு இந்திய அணியில் பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்