சசிகுமாருக்கு வில்லனாகும் தயாரிப்பாளர்

சனி, 17 மார்ச் 2018 (17:21 IST)
‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன் 2’விலும் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்கிறாராம் இந்தர் குமார்.


 
அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய ‘குற்றம் 23’ படத்தை தயாரித்தவர் இந்தர் குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘தடம்’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அருண் விஜய்யின் மச்சானான இவர், ‘கொடிவீரன்’ படத்தில் பூர்ணா கணவராக, சசிகுமாருக்கு வில்லனாக நடித்திருப்பார்.

இந்நிலையில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்க இருக்கும் ‘சுந்தர பாண்டியன் 2’ படத்திலும் வில்லனாக நடிக்கப் போகிறாராம் இந்தர் குமார். சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகு ‘சுந்தர பாண்டியன் 2’ ஷூட்டிங் தொடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்