இந்த படத்திலாவது விஜய் ரசிகர்களை திருப்திபடுத்துவாரா ஏ.ஆர். ரஹ்மான்?

திங்கள், 27 நவம்பர் 2017 (16:08 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் படம், ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தில், முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளார். இப்படத்தில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஹ்மான் இசையமைத்திருந்தார். மூன்று வேடங்களில் நடித்த விஜய்யின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை மற்றும்  திரைக்கதை மூன்றுமுகம் மற்றும் அபூர்வ சகோதரர்கள் படத்தின் சாயல் என்று சர்ச்சைக்குள்ளானது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மானின் இசை பெரிதாய் பேசப்படவில்லை. பல தரப்பினரும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்று கருத்து  தெரிவித்தனர். 
 
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் நிறைவு செய்யும் விதமாக விஜய்-முருகதாஸ் கூட்டணியில் ரஹ்மான் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் கியாரா அத்வானி நடிக்க  இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்