சூர்யாவின் கடைசிப் படங்களான மாசு என்கிற மாசிலாமணி, அஞ்சான் படங்கள் தோல்வியடைந்ததால்,வெற்றிபெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில், 24 படம் வெளியானது. தமிழகத்தில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கிலும் இப்படம் வெளியாகியுள்ளது. முதல் மூன்று தினங்களில் தெலுங்கு பதிப்பு மட்டும் 17 கோடிகளை வசூலித்துள்ளதாக ஹைதராபபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. சூர்யா நடித்த படங்களிலேயே தெலுங்கு டப்பிங்கில் அதிகம் வசூலித்தது 24 படமே என்கிறார்கள்.
வெளிநாடுகளிலும் படம் சிறப்பான வரவேற்புடன் ஓடுவது முக்கியமானது.