இந்நிலையில், சத்தமே இல்லாமல் அமலாபால் இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘முருகவேல்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மோகன்லால் நடிக்கும் 'லைலா ஓ லைலா' படத்தின் ரீமேக் படம் இது.
இப்படத்தை ஜோஷி என்பவர் இயக்கியிருக்கிறார். பெங்களூர் மற்றும் கோவாவில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். நாகன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் படத்தில் கஞ்சா கருப்பு, பப்லு ஆகியோர் நடித்துள்ளனர். கஞ்சா கருப்பு முக்கிய நகைச்சுவையாளர் மற்றும் படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.