பிக்பாஸ் வீட்டில் வையாபுரி அல்லது சினேகன் இருவரில் யாரை எவிக்ஷனிலிருந்து காப்பாற்றலாம் என பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, ரைசா சினேகனுக்கு ஆதரவாக பேசினார். அப்போது "சினேகன் சார் புத்திசாலி, உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அவர் உதவி தேவைப்படும்" என கூறினார்.
இதனை கேட்ட காய்த்ரி "என் பிரச்சனைகளை நானே சரி செய்துகொள்வேன்" என பதில் கூறியபோது, ரைசா சிரித்துவிட்டார். "அவ ஏன் என்னை பார்த்து சிரிச்சா... நான் என்ன குழந்தையா. என் பிரச்சனையை எனக்கு சமாளிக்க தெரியும்" எனவும் காயத்ரி கேட்டார். இதனை தொடர்ந்து இருவரிடையே வாய்சண்டை முற்றியது.