இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்திற்கு மெர்சல் என்று தலைப்பு வைக்கப்பட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதுவரை விவேகம் பர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட பர்ஸ்ட் லுக்காக இருந்து வந்தது. ஆனால், இன்று வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதை பார்த்துள்ளனர். இந்த போஸ்டர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இன்னும் முதலிடத்தில் உள்ளது.