100 படங்களுக்கு இசையமைத்துள்ள டி.இமான், தமிழில் மிக பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடந்த வருடம் மட்டும் இவர் இசையில் 10 படங்கள் ரிலீஸாகியுள்ளன. தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்கிறார். இதுதான் அவர் இசையமைக்கும் முதல் அஜித் படம்.
இதனைத் தொடர்ந்து, கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் நடிக்க இருக்கும் படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் டி.இமான். இந்தப் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். ஏற்கெனவே ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த ‘கோட்டிகொப்பா 2’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் டி.இமான். இந்தக் கன்னடப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.