எப்போது எனக்கு டீ வாங்கி தருவீங்க?-ரஜினியிடம் கேட்ட இளையராஜா

செவ்வாய், 6 ஜூன் 2017 (12:26 IST)
இசைஞானி இளையராஜாவின் 74வது பிறந்த நாள் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 




இந்த விழாவில் பேசிய இளையராஜா, என் பிறந்தநாள் விழா குறித்து கேள்விப்பட்டதும் நடிகர் கமல்ஹாசன் நானும் இந்த விழாவிற்கு வருவேன் என்று வந்து வாழ்த்து தெரிவித்தார். அதே போன்று நடிகர் ரஜினிகாந்தும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். 74 வயது என்பது சாதாரண விசயம் கிடையாது என்றும், அதனால்தான் வாழ்த்து கூறினேன் என்றும் ரஜினி கூறியதாக இளையராஜா கூறினார்.

அப்போது நான் ரஜினியிடம் எனக்கு நீங்கள் டீ வாங்கி கொடுக்கும் பாக்கி உள்ளது என்று கூறினேன். அதனை கேட்ட ரஜினி பத்து நிமிடங்கள் வரை சிரித்தார். பின்னர் கண்டிப்பாக சென்னை வந்ததும்  டீ வாங்கி தருவதாக கூறினார் என்று இளையராஜா பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்