இசை உரிமையை தயாரிப்பாளருக்கு தாரைவார்க்கும் தாராள இளையராஜா

திங்கள், 2 மார்ச் 2015 (11:09 IST)
இளையராஜா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்தப் படங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதுவொரு சரித்திர சாதனை. இந்த நேரத்தில் இன்னொரு சாதனையையும் அவர் செய்யவிருக்கிறார்.
இளையராஜா இசையமைத்த அனைத்துப் பாடங்களின் பாடல்களின் உரிமை இளையராஜாவிடம்தான் உள்ளது. அதனை அந்ததந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தரவிருக்கிறாராம். அப்படி தந்தால் அது நிச்சயமாக ஒரு புரட்சியாகதான் இருக்கும்.
 
தங்கள் இசையில் உருவான பாடல்களின் உரிமையை எந்த இசையமைப்பாளரும் பிறருக்கு விட்டுத் தந்ததில்லை.
 
இளையராஜா இசையமைத்திருக்கும் ஆயிரமாவது படம், தாரை தப்பட்டை. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு ஒட்டு மொத்த திரையுலகமும் சேர்ந்து பிரமாண்ட பாராட்டுவிழாவை நடத்த உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்