பேரன் யத்தீஷ்வர் இசையில் இளையராஜா பாடிய ‘போற போக்குல’ பாடல் ரிலீஸ்!

vinoth

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (14:40 IST)
இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும் அவரால் முன்னணி இசையமைப்பாளராக வரமுடியவில்லை. ஒரு கட்டத்தில் அவரே சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவரின் மகன் யத்திஸ்வரன் ஆன்மீக இசை ஆல்பம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவரது ஆல்பம் திருவண்ணாமலையில் வைத்து வெளியிடப்பட்டது. விரைவில் அவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தற்போது அவர் போற போக்குல என்ற தனிப்பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த பாடலை இளையராஜா பாடியுள்ளார் என்பதுதான் தனிச்சிறப்பு. இந்த பாடலில் முன்னோட்ட வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அந்த பாடல் ரிலீஸாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்