அமெரிக்காவின் டைம் ஸ்குவாரில் இளையராஜா! – ட்ரெண்ட் செய்யும் ராஜா ரசிகர்கள்!

ஞாயிறு, 21 நவம்பர் 2021 (09:15 IST)
அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் ஸ்குவாரில் இளையராஜா குறித்த விளம்பரம் வெளியான புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டு காலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. தற்போது அவரது பாடல்களை ஸ்பாட்டிஃபை செயலி தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம் ஸ்குவார் பகுதியில் ஸ்பாட்டிஃபை நிறுவனம் இளையராஜா பற்றிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் இளையராஜா ரசிகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்