அவ மூஞ்சிய ஒடச்சிருவேன்: பிக் பாஸ்ஸில் அதிரடியில் இறங்கிய நமீதா! (வீடியோ இணைப்பு)

வியாழன், 20 ஜூலை 2017 (12:44 IST)
தமிழ் தொலைக்காட்சி நேயர்களை கடந்த சில நாட்களாக தன் பக்கம் கட்டிப்போட்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை நமீதா தற்போது ஆவேசமாக நடந்து கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


 
 
பிக் பாஸ் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் மக்கள் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை பார்த்து தான் வருகின்றனர். மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது 10 பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதில் இந்த வாரம் வெளியேற்றுதலுக்கான நாமினேஷனில் நடிகை நமீதா, ஓவியா மற்றும் நடிகர் கணேஷ் உள்ளனர்.
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் விருந்தினர்களாக சிலர் வந்துள்ளனர். அப்போது கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க் குறித்து ஜூலி படிக்க முயன்ற போது நடிகை நமீதா குறுக்கீட்டு தலைவர் இருக்கும் போது நீ எதுக்கு படிக்ற என அவரை விருந்தினர் முன் அவமானப்படுத்துகிறார்.

 

 
 
அதன் பின்னர் ஜூலி மனமுடைந்து பெண்கள் அறையில் இருந்து அழுகிறார். அவரை நடிகை ஓவியா தேற்றுகிறார். பின்னர் நடிகை ஓவியா உணவு உண்ணும் இடத்தில் நமீதாவிடம் நீங்கள் அப்படி பேசியிருக்க கூடாது என கூற அவரிடமும் தனது கோவத்தை காட்டுகிறார் நமீதா. உங்களுக்கு என்ன நான் உங்க கிட்ட பேசினேனா என கொந்தளித்தார்.
 
இதற்கிடையில் நடிகை நமீதாவும், காயத்ரி ரகுராமும் பெண்கள் அறையில் அமர்ந்து கொண்டு ஜூலியை பற்றி பேசுகிறார்கள். அப்போது காயத்ரி ரகுராம் கூறும்போது தலைவர்னு ஒருவர் இருக்கும் போது அவள் எதுக்கு எல்லாத்துக்கும் முன்னாடி முன்னாடி செல்லனும் என நமீதாவை சூடேற்றி விடுகிறார். அப்போது நமீதா ஆங்கிலத்தில் நான் அவள பார்த்தல் அவ மூஞ்சிய ஒடச்சிருவேன் என ஆவேசமாக பேசுகிறார். நமீதா மூஞ்சிய ஒடச்சிருவேன் என கூறியது ஜூலியவையா? அல்லது ஓவியாவையா என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்