தனுஷ் , அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் இன்று வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. தனுஷின் தீவிர ரசிகர்களுக்கு இந்த படம் கொண்டாட்டமாக இருந்தாலும், நடுநிலை ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு மொக்கை என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
'மாரி' படத்திற்கு பின்னர் தனுஷூக்கு இன்னும் வெற்றி கிடைக்காததற்கு காரணம் அனிருத்தின் பிரிவே என்றும் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் இளையராஜாவை பகைத்து கொண்ட அத்தனை நடிகர்களும் இயக்குனர்களும் தோல்வியையே தழுவினர். அதேபோல் ஒரு நல்ல கூட்டணி உடைந்தால் மீண்டும் வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமான காரியம் என்றும் அடுத்த படத்திலாவது தனுஷ் கெளரவம் பார்க்காமல் அனிருத்துடன் இணைய வேண்டும் என்றும் அவருடைய நலன் விரும்பிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.