இனி நான் அதை செய்ய மாட்டேன் - ராகவா லாரன்ஸ்!

சனி, 15 செப்டம்பர் 2018 (11:51 IST)
அன்னை தெரசாவின் 108–வது பிறந்தநாள், சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு  ‘அன்னை தெரசா’ விருது வழங்கப்பட்டது.

விழாவில் லாரன்ஸ் பேசுகையில், "சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட், மது என்று எந்த பழக்கமும் இல்லை. டான்ஸ் மாஸ்டர் ஆனபின், நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, எப்போதாவது ஒருமுறை குடிப்பேன். அதையும் இப்போது நிறுத்தி விட்டேன்.

ரொம்ப ‘டென்‌ஷன்’ ஆக இருந்தால், கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது, அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க, இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்"

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்