“திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்” – பாவனா

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (14:11 IST)
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்’ என பாவனா தெரிவித்துள்ளார்.




 
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர் பாவனா. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய வாழ்க்கையில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு, தைரியமாக தன்னம்பிக்கையுடன் நடைபோட்டு வருகிறார் பாவனா. அடுத்த வருடம் அவருக்குத் திருமணம் நடைபெற இருக்கிறது. கன்னடத் தயாரிப்பாளரான நவீன் என்பவரை மணக்க இருக்கிறார்.

“என்னை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர்களில் நவீனும் ஒருவர். நான் எதற்கெல்லாம் முக்கியத்துவம் தருவேன் என அவர் புரிந்து வைத்துள்ளார். பெண்களை மரியாதையாகவும், ஒழுக்கமாகவும் நடத்தக் கூடியவர். கல்யாணத்துக்குப் பிறகும் நான் நடிப்பதற்கு அவர் தடைபோடவில்லை. அவரை அளவுக்கு அதிகமாக காதலிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பாவனா.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்