தான் பீட்டா உறுப்பினர் என்பது தவறானது: சௌந்தர்யா ரஜினிகாந்த்

வெள்ளி, 20 ஜனவரி 2017 (16:53 IST)
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி,  தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவசர சட்டம் கொண்டு ஆலோசனை  நடத்தி வருவதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 
போராட்டக்காரர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். பீட்டா அமைப்பிற்கு ஆதரவு  தெரிவித்து, ஏராளமான திரை நட்சத்திரங்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக  செயல்பட்டதாக கூறி, த்ரிஷா மற்றும் விஷால் போன்றோர் தற்காலிகமாக  சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், டிவிட்டரில் ‘நான் பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறேன்  என்பது தவறானதாகும். நான் பீட்டா உறுப்பினர் அல்ல, என்பதனை தெளிவுபடுத்த விரும்பிகிறேன். நான் ஜல்லிக்கட்டை  ஆதரிக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் மாணவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஜல்லிக்கட்டை உறுதியாக ஆதரிக்கிறோம். இந்த மகத்தான பெருமை தரும் போராட்டத்தில் ஈடுபடும் தமிழனுக்கு  எங்களின் முழு ஆதரவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்