முகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் அல்ல - ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்!
திங்கள், 18 நவம்பர் 2019 (17:48 IST)
தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி' சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார்.
அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம். இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge'* கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் கூட பலரும் சந்தோஷியிடம் பயிற்சிக்கு வருகின்றனர்.
இந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை நேற்று (நவ-17) சென்னையில் பிரபலமான ஐடிசி சோழா ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தியுள்ளார் சந்தோஷி.. இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னித்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் லட்சுமி அகர்வால் பேசும்போது, “இங்கு யாரையும் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு, பாதிக்கப்பட்டவர்களாக பரிதாபப்படுவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.. 2005ல் என் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடைபெற்றது.. இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பிறந்து வாழ்வது தான் மிகப்பெரிய கஷ்டம்.. அதிலும் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வாழ்வது என்பது கடினமான ஒன்று..
2009 வரை முகத்தை மறைத்தபடி தான் எங்கும் சென்று வந்தேன் ..ஆனால் அதன் பிறகுதான் நான் ஒன்றும் கிரிமினல் இல்லையே எதற்காக முகத்தை மூடி மறைக்க வேண்டும்.. யாருக்கெல்லாம் என்னைப் பார்த்து அசிங்கமாக தோன்றுகிறதோ முதலில் அவர்கள்தான் தங்களைப் பார்த்து அசிங்கப்பட்டுக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன். ஆசிட் வீச்சால் தாக்குதலுக்கு ஆளானது ஒருமுறைதான்.. ஆனால் இந்த சமூகத்தில் அதை சுட்டிக்காட்டியே பலமுறை நான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்..
ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து அதிலிருந்து வெளியே வந்து உங்கள் முன் தைரியமான ஒரு பெண்ணாக நான் நின்று கொண்டிருக்கிறேன்.. மேக்கப் என்பது ஒரு பெண்ணுக்கு அழகு தான் என்றாலும் மனசு அழகாக இருந்தால் முகத்தில் அது தானாக தெரியும்.. அதனால் நான் எப்போதும் இந்த அழகாகவே உணர்கிறேன்” என்று கூறினார்