தமிழ் சினிமாவில் காமெடிய நடிகராக அறிமுகமாகி கிடு கிடுவென வளர்ந்து வரும் சந்தானம் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து மார்க்கெட்டை இழந்துவிட்டார். மேலும் பரோட்டா சூரி, யோகி பாபு உள்ளிட்டோர் அவரது இடத்தை நிரப்பி ரசிகர்களின் ஃபேமஸ் காமெடியன்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விட்ட இடத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக சந்தானம் விடா முயற்சியுடன் இருந்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த A1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவிற்கு வசூலும் பெற்றது. அதையடுத்து தற்போது டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் யோகி இயக்கம் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது.
அதேபோல் படத்தின் டெக்னிக்கல் டீமும் சிறப்பாக அமைந்துள்ளது. இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜா களத்தில் இருப்பதால் படத்தின் பின்னணி இசை பாடல்கள் பற்றிச் சொல்லத்தேவை இல்லை. தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கிறார். நாயகன் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் ரசிகனை நம்ப வைக்கும் விதமாக கொரியோகிராபி செய்யும் தினேஷ் சூப்பராயன் சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் பாடல்களை எழுதுகிறார்கள். ஆர்ட் டைரக்டராக A. ராஜேஷ் பணியாற்றுகிறார்.