பாகுபலியில் தமன்னா முழுமையாக அவந்திகாவாக மாறியது இப்படிதான் (வீடியோ)
சனி, 29 ஏப்ரல் 2017 (15:22 IST)
பாகுபலி திரைப்படத்தில் தமன்னா அவந்திகாவாக நடித்துள்ளார். எப்படி இவர் அவந்திகாவாக மாறினார் என்பது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாகுபலி 2 ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பாகுபலி இரண்டாம் பாகத்தில் தமன்னா ஒரு சில காட்களில் மட்டுமே வருகிறார். அதுவும் இறுதி சண்டை காட்சியில்தான் வருகிறார். இரண்டாம் பாகம் முழுக்க அனுஷ்க்காவை மையாக வைத்துதான் எடுக்கப்பட்டுள்ளது.
பாகுபலி முதல் பாகம் தமன்னாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமன்னா அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமன்னா எப்படி அவந்திகாவாக மாறினார் என்பது குறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.