எப்படி தலையோட கெட்டப்...?

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (13:05 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களில் சிலவற்றை நேற்று வெளியிட்டனர். அஜித் ரசிகர்களுக்கு இது போதாதா? ட்விட்டரில் அதனை ட்ரெண்டாக்கிவிட்டனர்.


 
 
முழுக்க வெளிநாடுகளில் படமாகும் இந்தப் படத்தில் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களும், சண்டைக் கலைஞர்களும் அதிக அளவில் இடம்பெறுகின்றனர். அசப்பில் அஜித்தும் வெள்ளைக்காரர் போலத்தான் இருக்கிறார். காரணம் அவரது தலை.
 
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த அவரது தலைமுடி இப்போது சால்ட் கொஞ்சம் தூக்கலாக உள்ளது. இப்படியொரு ஹேர் ஸ்டைலில் துணிச்சலாக நடிக்கும் ஒரே நடிகர் அஜித்தாகத்தான் இருக்கும்.


 
 
கறுப்பு உடையில் அஜித்தின் கெட்டப் எப்படி...? சும்மா அதிருதில்ல....

வெப்துனியாவைப் படிக்கவும்