கவனம் ஈர்க்கும் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட டிரைலர்!

வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:32 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. 

இப்போது அவர் டீசல், நூறு கோடி வானவில், பார்க்கிங் என ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் இப்போது வெளியாகியுள்ளது.

வாடகை வீட்டில் குடியிருக்கும் ஹரிஷ் கல்யாணின் காரைப் பார்க் செய்வதில் ஏற்படும் பிரச்சனையைப் பற்றிய இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்