பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனிதா விஜயகுமார்!

செவ்வாய், 5 அக்டோபர் 2021 (08:16 IST)
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
தளபதி விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு மாணிக்கம், காக்கை சிறகினிலே, நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர்.
 
இந்த நிலையில் தற்போது அவர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் பிக்கப் டிராப் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற வனிதா விஜயகுமார் இன்று பிசியான நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்