ஹனிமூன் சென்ற ஹன்சிகா - விடாமல் வளைச்சி வளைச்சி படம் பிடித்த ரசிகர்கள்!

சனி, 10 டிசம்பர் 2022 (11:07 IST)
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் நடிகையானவர் ஹன்சிகா. இவர் குஷ்பு போல பூசினார் போல இருந்ததால் அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. 
 
இதனால் ஒல்லியான தோற்றத்திற்கு மாறி வாய்ப்புகள் கிடைக்குமா என எதிர்பார்த்தார். ஆனால் கிடைத்த பாடில்லை. இதனால் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதற்கு முன்னர் நடிகர் சிம்புவை காதலித்து கழட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் புது கணவருடன் குஜாலாக இருந்து வரும் ஹன்சிகா தற்போது கணவருடன் சேர்ந்து ஹனிமூன் சென்றுள்ளார். அப்போது ஏர்போர்ட்டில் புது ஜோடியை வளைத்து பிடித்து ரசிகர்கள் படம்பிடிக்க ஹன்சிகா வெட்கத்துடன் அங்கிருந்து விடைபெற்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்