ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வந்தார். அந்த படம் முடிந்த நிலையில் அவர் கைவசம் வேறுபடங்கள் இல்லை என்றானது.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு அவருக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. இதுவரை அவர் இந்த ஆண்டில் 8 படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில் கடைசியாக இப்போது அவர் வாலு மற்றும் ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவைத் தவிர எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸ், மற்றும் தனுஷுடன் ஒரு படம் என பிஸியாகியுள்ளார்.