ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் பட முதல் சிங்கிள் ரிலீஸ்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:50 IST)
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பேச்சுலர் படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சதீஷ் செல்வக்குமார் இயக்கியுள்ள பேச்சுலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அடியே என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் வழியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்