மறைந்த பாடகர் கே.கேவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும்-முதல்வர் அறிவிப்பு
வியாழன், 2 ஜூன் 2022 (16:01 IST)
இந்திய திரையுலகின் பன்மொழி பாடகரான கே.கே. என அழைக்கப்பட்ட கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவின் நேற்று காலமானார்.
இவர் பாடிய, தாலியத்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா, ஸ்டாபெர்ரி பெண்ணே, அ ந் நியன் படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி, காதல் வளர்த்தேன், நீயே நீயே போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது.
இந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த கேகேவின் உடலுக்கு இன்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.