மக்களே தயாரிப்பாளர்கள் – கோபி சுதாகரின் புதிய முயற்சி !

புதன், 20 மார்ச் 2019 (15:16 IST)
கிரவுட் பண்டிங் என சொல்லப்படும் மக்களிடம் இருந்தே பணம் வசூல் செய்து படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர் யுடியூப் புகழ் கோபியும் சுதாகரும்.

கிரவுட் பண்டிங் என்று சொல்லப்படும் மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்து திரைப்படங்களை உருவாக்கும் நடைமுறை வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். மிகப்பெரிய ஸ்டுடீயோக்கள் மற்று  தயாரிப்பு நிறுவனங்களை அனுக முடியாத நல்ல கதை வைத்துள்ள இயக்குனர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் மூலமாகவோ அல்லது இணையதளங்களின் மூலமாகவோ பணம் திரட்டி படத்தை எடுத்து வருகின்றனர். இதில் பணம் முதலீடு செய்யும் ஒவ்வொருவருமே தயாரிப்பாளர்கள்தான்.

அதுபோல இந்தியாவில் முதன் முதலாக கன்னடத்தில் லூசியா எனும் திரைப்படம் மக்கள் பணத்தில் வெளியாகி வெற்றிக் கண்டது. அதையடுத்து இந்த முயற்சிக்கு இப்போது ஆதரவு பெருகி வருகிறது. சமீபத்தில் வெளியான நெடுநல்வாடை எனும் திரைப்படம் கூட இயக்குனரின் 50 நண்பர்கள் உதவியால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதுபோல இப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் கோபி மற்றும் சுதாகர் ஒருப்படத்தை தொடங்க உள்ளனர். இதற்காக தங்கள் யூட்யூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டுள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நாள்களில் படக்குழு 75 லட்சம் ரூபாயை 12,500 பேரிடமிருந்து பெற்றுள்ளது. இந்தியாவில் உருவான கிரவுட் பண்டிங்க் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இது உருவாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் சாக் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்