தர்ஷன் - லாஸ்லியா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

வெள்ளி, 12 மார்ச் 2021 (20:06 IST)
தர்ஷன் - லாஸ்லியா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடிக்கும் திரைப்படம் கூகுள் குட்டப்பன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் இயக்கி வருகின்றனர்
 
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்