இந்திக்கு செல்லும் தமிழ் பேய்

திங்கள், 11 ஜூலை 2016 (13:05 IST)
ரசிகர்களை பயமுறுத்தி கவர்வது பழைய பேய் படங்களின் ஃபார்முலா. இப்போது சிரிக்க வைத்து கவர்வதே ஃபேஷன்.


 


சமீபத்தில் வெளியான சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படம் சிரிக்க வைத்தே சில்லறையை சேர்க்கிறது.
 
முதல் நாளில் 4 கோடி அளவுக்கு வசூல் செய்த இந்தப் படம், முதல் நான்கு தினங்களில் 15 கோடிகளை வசூலித்துவிடும் என்கிறார்கள். இந்த வெற்றியால் கவரப்பட்ட பிறமொழி தயாரிப்பாளர்கள், தில்லுக்கு துட்டு படத்தின் ரீமேக் உரிமையை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். முக்கியமாக இந்திப்பட நிறுவனம் ஒன்று ரீமேக் உரிமைக்காக தேனாண்டாள் பிலிம்ஸை அணுகியுள்ளது.
 
விரைவில் ரீமேக் உரிமை யாருக்கு என்பது தெரிந்துவிடும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்