பாகுபலி 2' படத்தின் பயணத்தை பின்பற்றும் 'விவேகம்'

புதன், 7 ஜூன் 2017 (00:30 IST)
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று ரூ.1600 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.



 


இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற விநியோகிஸ்தர்களுக்கு பணமழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற கிட்டத்தட்ட அனைத்து விநியோகிஸ்தர்களும் அஜித்தின் 'விவேகம்' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று வருகின்றார்கள். 'பாகுபலி 2' படத்தை அடுத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக 'விவேகம்' இருக்கும் என்ற நம்பிக்கை அனைத்து விநியோகிஸ்தர்களிடமும் உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற குளோபல் யூனிட்டட் மீடியா என்ற நிறுவனம் ரூ.4 கோடிக்கு 'விவேகம்' படத்தை பேசி வருகிறது. இந்த டீல் முடிந்தால் இதுதான் கேரளாவில் அஜித் படத்தின் அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்